Friday, July 19, 2013

சாரல்கள் - 1


உன்னிடம் கொட்டி செல்லும்
அனைத்தையும்
எப்படி நீ மட்டும்
அழகாக
உள்வாங்கி கொள்கிறாய்!

- மெரீனா


எவ்வளவு தூரம் தான் உன்னால்
என்னை விட்டு ஓட முடியும்!
ஓடு.
உன்னால் முடிந்த வரை ஓடு!
ஆனால்,
எங்கு ஓடினாலும், மீண்டும்
என்னுடன் தான்
நீ இணைந்தே ஆக வேண்டும்!!!

- கடிகாரத்தின் பெரிய முள், சின்ன முள்


எத்தனை வேகமாக சென்றாலும்
எத்தனை,
எத்தனை அழகான நினைவலைகளை
உன்னுடன் சுமந்து கொண்டு ஓடுகிறாய்!

- ரயில்


எவ்வளவு தான் எல்லோரிடமும்
நீ முறுக்கி கொண்டாலும்,
என்னிடம் மட்டும்
உன் பாசாங்கு பலிக்காமல்
சரண் அடைந்து விடுகிறாயே!!!!

- இஸ்திரி பெட்டி


உன்னால் தான்
எல்லா இன்னல்களையும்,
மனஉளைச்சலையும்
அசாதாரணமாய் கடந்து விடுகிறேன் நான்....

- புரிதல்


கண் அயரும் நேரத்திலாவது,
என்னருகே வராதே என்று
உன்னை நான் துரத்தினாலும்
நீ இல்லை என்றால் என்ன, என்று
என் மொத்த படுக்கையையும்
நீயே
ஆக்கிரமித்து கொள்கிறாய்!

- புத்தகங்கள்


என் உறவுகளை எல்லாம்
மென்மையாக தீண்டும் நீ!
ஏன்,
என்னை மட்டும்
இவ்வளவு ஆக்ரோசமாய் தாக்குகிறாய்!
நீ கட்டளை
இடுவதை எல்லாம்
செய்து முடிப்பதனாலா!!!!

- Enter Key


என் எல்லா செயல்களுக்கும்,
நீ விரும்பியோ,
விரும்பாமலோ
உன்னையே சாட்சியாக்குகிறேன் நான்.... !!!!

- கையெழுத்து


அணைக்கும் பொழுது,
என்னை
லாவகமாகவே அணைக்கிறாய்!
உன்னருகே கொண்டு வரும்போதும்,
என்னை
மென்மையாகவே தீண்டுகிறாய்!
திடீர் என்று ஏன்,
என்னை
இப்படி கசக்கி எறிகிறாய்!
ஓ!
என் தேவை தீர்ந்துவிட்டதோ ????

- பேப்பர் கப்


என் மீது
எறியப்படும் கற்களை கொண்டு
படிக்கட்டுகள் அமைத்து
முன்னேறி கொண்டே இருப்பேன் ஒவ்வொருநாளும்....

- விமர்சனங்கள்

19 comments:

  1. அத்தனையும் அருமையான வித்தியாசமாக சிந்தித்த குட்டிக்கவிதைகள்... வெகு அழகாய் கவர்ந்தது... மிகச்சிறந்த எழுத்து...
    வாழ்த்துக்கள்... தொடர்ந்து அடிக்கடி எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. பொழுது போகாமல் எழுத ஆரம்பித்த என் கவிதைகளுக்கு அங்கீகாரம் தந்து இரண்டாம் இடம் கொடுத்து என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும் உங்கள் அன்பு உள்ளத்திற்கு நன்றிகள்......

      Delete
  2. அனைத்தும் அருமை...

    மிகவும் பிடித்தவை : முதலும் கடைசியும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், உங்கள் கருத்திற்கும் நன்றி....தகவல் தந்தமைக்கு சிறப்பு நன்றிகள்......

      Delete
  3. ellam kavithaigalum arumai.........ne nalla varuveenga...........al the best

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கு நன்றி.....

      Delete
  4. வாழ்த்துக்கள்! அனைத்து கவிதைகளுக்கும் மிக பொருத்தமான புகைப்படங்கள் ..
    எனக்கு பிடித்த கவிதை "புத்தகங்கள்" மற்றும் "பேப்பர் கப்" ..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி பரணி .....

      Delete
  5. சிறப்பாக எழுதுகிறீர்கள்,
    இன்னும் கொஞ்சம் விசாலமான பார்வையுடன்
    சமூகம் சார்ந்த கவிதைகளையும் தருவீர்கள் என நம்புகிறேன்
    தொடர்ந்து எழுதுங்கள் ., வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி, உங்கள் ஊக்கம் மேலும் என்னை எழுத தூண்டுகிறது.....

      Delete
  6. தங்களின் தளம் அறிமுகம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/14-to-20-07-2013.html

    ReplyDelete
    Replies
    1. தகவல் தந்தமைக்கு சிறப்பு நன்றிகள்.......

      Delete
  7. வாழ்த்துக்கள் ! அணைத்து கவிதைகளும் மிக பிரமாதம். கவிதைகளுக்கு பொருத்தமான புகைபடங்கள்.

    - ரங்கராஜன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி......

      Delete

  8. உன் சாரல்கள் எங்கள் உள்ளங்களை நனைத்தது மட்டுமல்லாமல்
    உலகம் பற்றிய சிந்தனைகளை தூண்டுகிறது...
    உன் படைப்புகளின் எதிர்பார்ப்புடன் !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.....உங்கள் ஊக்கம் மேலும் என்னை எழுத தூண்டுகிறது.....எதிர்பார்புகளை ஏமாற்ற கூடாது என்று முயற்சிக்கிறேன்.....:)

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete