Saturday, July 27, 2013

சாரல்கள் - 2


என் முயற்சி
என் வலிமையால்
மட்டுமே என்னால்
மேலே மேலே செல்ல முடியும்
என ஊக்குவித்தவன் நீ!
வாழ்வின் ஏற்ற தாழ்விற்கும்
என்னை பழக்கியவன் நீ!

- ஊஞ்சல்


என் வாழ்வு
உன்னோடு இன்று ஒரு நாள் தான்
தெரிந்தும்
உன்னை அழகாகவே வைத்திருக்கிறேன்
மறந்தும் கண்ணீர் விட்டு
சீக்கிரம் முடித்து விடாதே
என் வாழ்வை!

- கண் மை


என் வலிகள் கேட்க
எந்த காதுகளுக்கும் நேரம் இல்லை
உன் வலிகளை கேட்பதற்காகவாவது
என் காதுகள் இருக்கட்டுமே!

- என் காதுகள்


எப்பொழுது தான் அடங்கும்
உன் பசி
இந்த தீரா பசியை
நாங்கள் போக்குவதற்குள்
இன்னும்
எத்தனை எத்தனை
உயிர்களை தின்பாய்........:(((

- சாதி வெறி


நீ பார்த்து பேசாமல்,
உன் மூலம் பார்த்து பேசும்
பல உள்ளங்களின்
சந்தோசத்தை கண்டு
ஏக்க பெருமூச்சி விட்டு,
துயரங்களை கண்டு
மனம் கனத்து,
அவ்வப்பொழுது,
தொடர்பினை துண்டித்து விடுகிறாயோ!

- SKYPE


கடன் வாங்கி,
நகை வாங்கும்
கோமாளித்தனம்!

- அட்சய திருதியை


உன்
எல்லா பிரச்சனைகளுக்கும்
காரணம் நானே என்றாய்!

உன் மனதின்
தவறான புரிதல்களும்,
தவறான எண்ணங்களும்
இனைந்து ஈன்ற பிள்ளை நான்.

எனை ஈன்ற பிழை மனம்
எப்படி இன்பமாய் இருந்திட முடியும்!

உண்மையாய் உன்னை நேசித்தவர்களிடம்
என்னால் நீ விலகி நிற்கிறாய்!

உந்தன் உள்மனம் திருந்தும் வரை
நான் உன்னை விட்டுப் போகமாட்டேன் !!

- அதீத அன்பு (Possessiveness)


ஏன் திணிக்கிறாய் என்னுள்,
என் அளவிற்கு மேல்!
நான் என்ன‌ உன் மனமா?
எல்லாவற்றையும், ஏற்று கொண்டு
நீ விரும்பும் நேரத்தில்,
தேடி எடுத்து தர!

- என் கைப்பை


உன்னால்,
மொத்த உலகமும்
என் கையில் என்றேன்!
நகைத்துவிட்டு சொன்னாய்,
என் கையில் அடிமையாக தான் நீ!!!!

- செல்பேசி


சிறகை ஒடித்து கூண்டில் அடைக்கப்பட்ட நான்
என் ஒவ்வொரு நாள் அனுபவத்திலும்
கூண்டை உடைக்க கற்று கொண்டேன்!
இறுதியில், ஒரு நாள்
சிறகுகளும் விரிந்தது
கூண்டையும் உடைத்து விட்டேன்!
பறக்க எத்தனிக்கிறேன் முடியவில்லை
என் மீள், மீள் முயற்சியில் பறந்தேவிட்டேன்!
விட்டில் பூச்சியாய் இல்லை,
பீனிக்ஸ் பறவையாய்!!!!

- விடாமுயற்சி

9 comments:

  1. பல வரிகள் உண்மை...

    விடாமுயற்சியுடன் ஊஞ்சலில் கண் மையை மிகவும் ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி....:)

      Delete
  2. அத்தனையும் அழகு..
    ரசித்தேன்

    ReplyDelete

  3. ஏன் திணிக்கிறாய் என்னுள்,
    என் அளவிற்கு மேல்!
    நான் என்ன‌ உன் மனமா?
    எல்லாவற்றையும், ஏற்று கொண்டு
    நீ விரும்பும் நேரத்தில்,
    தேடி எடுத்து தர!

    - என் கைப்பை
    மிக அருமையான கவிதைகள்... ஒருசில வார்த்தைக்கோர்ப்பில் முன்னேற்றம் தேவைப்பட்டாலும் In total... all are good...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி....

      இப்பொழுது தான் இது போல கவிதைகள் எழுதும் முயற்சிகளில் ஈடுபடுகிறேன்....நிச்சயம் கவனம் கொள்கிறேன் நன்றி.....

      Delete
  4. சுந்தரி... உங்களுக்கு சிதறல்கள் பிளாக் எழுதும் தீபாவை(தீபலெஷ்மி)தெரியுமா?... எனது கல்லூரித்தோழி அவர்... அவருடன் மூன்று வருடங்கள் Civil engineering ஒரே வகுப்பில் பயின்றிருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் தெரியும் , ப்ளாக் மூலமே....

      Delete
  5. நன்றி பகிர்ந்தமைக்கு......:)

    ReplyDelete