Saturday, August 3, 2013

சாரல்கள் - 3

உன்
எல்லா பயணத்திலும்
சேர்ந்தே பயணிக்கும் என்னை,
உன்
எல்லை இது என
தனித்து விட்டு செல்லும் உனக்காக,
உன்
அடுத்த பயணத்திற்கும்
தயாராகவே நான்...

- செருப்பு

எல்லா சிக்கல்களையும்
நீயே தீர்க்கிறாய்
என்ற கர்வம் உனக்கு!
உண்மையில்
உன் தீர்க்க படாத
சிக்கல்களுக்கு நானே தீர்வு!!

- சீப்பு

உன்னையும், என்னையும்
எந்த தொழில்நுட்பம் இணைத்தாலும்!
நினைக்கும் பொழுது
தோள் கொடுக்கவும், தோள் சாயவும்,
நீ என் அருகாமையில்
இருப்பது போல் வருமா!

- பிரிவு

வெற்றி தரும் மகிழ்ச்சியில்
தோல்வி தரும் துக்கத்தில்
பயணம் தரும் களைப்பில்
எல்லாவற்றிலும்
உன்னுடனே இருக்கும் என்னை
வேண்டாம் என்று அந்நியபடுத்துகிறாய்,
சிறு பிள்ளை போல்!
நான் இல்லாமல் எப்படி
இவ்வுலகில் தனியாய் நீ மட்டும்!

- நினைவுகள்

என்னை அழகாக்க
என்னை சிரிக்க வைக்க
என்னை உத்வேகப்படுத்த
என்னை சந்தோசப்படுத்த
நீ சொல்லும் பொய்களையெல்லாம்
நான் நம்பிக்கொண்டிருப்பதாக
நடித்துக்கொண்டிருக்கிறேன்
உனக்காக...

- பொய்கள்



எனக்கான எல்லையை, நீயே தீர்மானித்து
என்னை ஓட செய்கிறாய், அந்த எல்லையை நோக்கி!
எல்லையை தொடும்முன்
எனக்கான அடுத்த இலக்கையும் நீயே தீர்மானிக்கிறாய்!
மீண்டும், மீண்டும்!
புரிந்தும், புரியாமலும்!
நீ சொல்லும் இலக்கை நோக்கியே நான்!

- ஆசைகள் (சமயத்தில் ஆகின்றன பேராசைகளாய்!)

என்னை உயரத்தில் வைத்து
அழகு பார்ப்பவள் நீ !
உனக்கு எட்டாகனியாய்
இருந்துடுவேனோ என்று நினைத்து,
உன் பிடிமானத்தை
என் மேல் இறுக்கி
என்னை காற்றின் திசைக்கு ஏற்ப
ஆடவிடாமல் செய்வது நியாய‌மா?

- பட்டம்

கவலைகளை போக்கும்
அரும்மருந்தாய் நினைத்தாய்
இறுக்கமான சூழலில்
விடுவிப்பதாய் கூறினாய்
சந்தோசத் தருணத்தில்
கிளர்ச்சியூட்டுவது என்றாய்
பொழுதுபோகா நேரத்தில்
தோழமை என்றாய்
பின் ஏன்
உன்னுடன் என்னையும் சேர்த்து
துயரத்தில் ஆழ்த்தி சென்றது !

- புகைத்தல்

நானே
கேள்விகளை கேட்டுக்கொண்டு
அதற்கு,
நானே
பதிலும் அளித்துக்கொண்டு
யோசிக்க முயற்சிக்கிறேன்.

சில நேரங்களில்
தெளிவு பிறப்பதுண்டு
ப‌ல நேரங்களில்
குழம்பியதுண்டு
ஆனால்,
கேள்விகள் மட்டும்
முடிவதாக இல்லை!

- கேள்விகள்

என் சந்தோசங்கள், துயரங்கள்
என் வெற்றி,தோல்வி என
என்னுளே பொதிந்து,பொதிந்து
எனக்கே உரமாய் மாறி,
ஊக்குவித்து
என்னை  மீண்டும் மீண்டும்
எழ செய்து அழகு பார்ப்பதற்கு
உன் ஒருவனாலே முடியும்
எந்த பிரதிபலன் இல்லாமல்!

 -  என் அனுபவம் 

6 comments:

  1. அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்...:)

      Delete
  2. குட்டி குட்டியாய் மிக அருமை... அனைத்துமே மிகச்சிறப்பான சிந்தனை படைப்பு... வார்த்தை கோர்ப்புகளும் கருப்பொருளும் கச்சிதமாய் பொருந்தியிருந்தது அழகு...
    நல்ல முன்னேற்றம்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.....:)

      Delete
  3. அனைத்தும் அருமை .இதில் ஒன்றை எனது கவிதை உலாவில் வெளியிட்டுள்ளேன்
    நிலவின் முகமா நீ !(கவிதை உலா 03ஆகஸ்ட் 2013)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.....

      பகிர்ந்தமைக்கு நன்றிகள்.....

      Delete