Monday, November 4, 2013

அலுவலகம்

எதை பற்றியும் 
கவலை இல்லாத காலம் 
கல்லூரி காலம்! 

வாழ்க்கை பயணத்தில் 
வாழ்வு பயத்தினை 
காட்டி செல்லும் காலம்
வேலைக்கான தேடல் படலம்!!

என் தேடலும் 
என் கண் முன்னே 
அப்பயத்தினை காட்டி
என் மீதான தன்னம்பிக்கையை 
ஆட்டி பார்த்த காலம்!

காலத்தின் முடிவில் 
என் முதல் வேலை !
என் முதல் வேலை
சந்தோசத்தின் உச்சம் !!

வேலையை பற்றியே 
மனம் சுற்றிய நாட்கள் 
பேருந்து ரயிலென மாறி மாறித்
தொடும் அலுவலகம்.
வார்த்தைகளின் கூட்டங்களாய் 
வேலை வலை விரிக்கும்.
கணினியின் கரங்களின் பிடி 
எப்போதும் அலை கழிக்கும்
வாரத்தின் கடைசிக்காய் ஏங்கும் நாட்கள்
திங்களின்  விடியலில் தொடங்கும் ஓட்டம்!

பணியின் கரங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை
பணியின் நாட்கள் அற்புதமானவை
திசைக்கொன்றான பறவைகள்
தினம் கூடும் கூடு வேலையின் கூடு.
கூடு ஒன்றே பறவைகள் பலவிதம்!

தேடலில் கற்றவை அனைத்திலும் 
தோழன் தோழியருக்கும் பெரும் பங்குண்டு. 

ஆம்,
நம்மை செதுக்கிய சிற்பிகள் அல்லவா அவர்கள்.
நம்மை செதுக்கி கொண்டே 
இருப்பவர்களும் அவர்களே !!

ஒவ்வொருவரின் முகத்திலும் 
ஒவ்வொரு பரிமாணங்கள் 
ஒவ்வொருவரும் கற்று கொடுத்த பாடம் 
ஆயிரம் ஆயிரம்.
இன்னும் கற்றுக்கொண்டே 
தொடரும் பயணம் !

கால ஓட்டத்தில் கூடுகள் மாறும்.
புது புது பறவைகளுடன் 
சேர்ந்தே பயணிக்கும்.
பார்த்தவுடன் சிலரை பிடிக்கும், 
பழக பழகவே பலரை பிடிக்கும்.

ஏமாற்றங்களை கற்று கொண்டு, 
வாழ்க்கை பயணத்தில் 
அதை 
படிக்கட்டுகளாய் மாற்றி 
முன்னேறி கொண்டே 
இங்கு வரை வந்துவிட்டோம் 
இன்னும் பயணிப்போம். 

தேடல் மற்றும் 
தேடலுக்கான முயற்சிகள் 
மட்டும் முடிவதில்லை.......
தேடல்கள் தொடரட்டும் !!!!!

8 comments:

  1. அருமையான கவிதை
    இறுதி வரிகள் அற்புதம்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எண்ணங்களை எழுத்துகளால் கோர்த்து பூ மாலையை எங்களுக்கு சூடிய உன் உள்ளத்திற்கு கோடி நன்றிகள்

    ReplyDelete
  3. கவிதை மிக அருமை.. தேடல்கள் முடிவதில்லை.. ஒரு தேடல் மற்று ஒரு தேடலைதான் தொடர வைக்கும்.....

    ReplyDelete
  4. கவிதை மிகஅருமை.. தேடல்கள் முடிவதில்லை.. ஒரு தேடல் மற்று ஒரு தேடலைதான் தொடர வைக்கும்.....

    ReplyDelete
  5. தேடல்கள் என்றும் இருக்க வேண்டும்... சிறப்பு...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. sundari romba nalla irukku.congrats

    ReplyDelete
  7. sundari romba nalla irukku.congrats

    ReplyDelete
  8. அடடே பெரிய கவிஞர் போலவே..:)

    ReplyDelete